Loading...
 

சந்திப்பின் பிற கதாபாத்திரங்கள்

 

நிலையான சந்திப்பு பாத்திரங்களுக்கு மேலதிகமாக, கிளப்புகள் தங்களுக்கு தேவைப்படும் சொந்த சிறப்பு பாத்திரங்களையும் சந்திப்பு பிரிவுகளையும் வரையறுக்கலாம்.

உதாரணமாக, சில கிளப்புகளில் "ஜோக் மாஸ்டர்" என்ற ஒரு கதாபாத்திரம் இருக்கும், இவர் பார்வையாளர்களுக்கு நகைச்சுவைகளை சொல்லுவார், அல்லது பார்வையாளர்களிடம் நகைச்சுவைகளை சொல்லுமாறு கேட்பார், இவ்வாறு செய்வது தயக்கங்களை உடைப்பதற்கும், மிகவும் கடினமான ஆனால் பொது சொற்பொழிவாற்றுவதன் மிகவும் பயனுள்ள கருவியான நகைச்சுவையை பயிற்சி செய்வதற்கும் உதவியாக இருக்கும். 

சில கிளப்புகள் மொழியின் கட்டுப்பாட்டை மேம்படுத்த உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக மொழி விளையாட்டுகளைக் கொண்டுள்ளன, எனவே இந்த விளையாட்டுகளை முன்னெடுத்து நடத்துவதற்கு "விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்" என்று அழைக்கப்படும் ஒரு பாத்திரத்தைக் கொண்டிருக்கும்; ஒரு குறிப்பிட்ட சந்திப்பிற்கான மொழி விளையாட்டு அமர்வை ஒழுங்கமைக்கும் பொறுப்பு இந்த பாத்திரத்தை வகிக்கும் நபருடைய பொறுப்பாகும்.

ஸ்டாண்டார்ட் அல்லாத பாத்திரங்கள் இருந்தால் உங்கள் கிளப்பில் இருந்தால், சந்திப்பின் தலைவரோ அல்லது இந்த பாத்திரங்களுக்குப் பொறுப்பான நபர்களோ சந்திப்பின் தொடக்கத்தில் இத்தகைய பாத்திரங்களின் நோக்கத்தை விளக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், விருந்தினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் இருவருக்கும் இத்தகைய பாத்திரங்கள் பற்றி தெரியாது .

நீங்கள் ஒரு கிளப்பில் கல்விக்கான துணைத் தலைவராக இருந்தால், நீங்கள் ஒரு புதிய பிரிவை முயற்சி செய்துப் பார்க்க விரும்பினால், உங்கள் கிளப் சந்திப்புகளில் இந்த சிறப்புப் பாத்திரத்தை இடம்பெறச் செய்ய நீங்கள் யாரிடமிருந்தும் அனுமதி கேட்கத் தேவையில்லை - அந்தப் புதிய பாத்திரத்தை சந்திப்புகளில் இடம்பெறச் செய்து, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பாருங்கள். மறுபுறம், நீங்கள் ஒரு கிளப்பில் உறுப்பினர் அல்லது பிற அலுவலராக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் VPE உடன் கலந்தாலோசித்து, கல்வித் திட்டத்திற்குள் அதைச் செயல்படுத்த ஒன்றாக பணியாற்றுங்கள்.

நீங்கள் எந்தப் பாத்திரங்களை வரையறுக்க விரும்பினாலும், Agora பேச்சாளர்களின் முக்கிய குறிக்கோள் சமூகத்தைக் காட்டிலும், முக்கியமாக கல்வி ரீதியானதே என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். எனவே, அனைத்து நடவடிக்கைகளும் உறுப்பினர்களின் கல்விக்கு உதவும் விதமாகவே இருக்க வேண்டும்.

அதே போல, பல விஷயங்களை வைத்து சந்திப்பில் அதிக சுமை ஏற்றாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இரண்டு மணி நேரத்திற்கும் மேலான சந்திப்புகள் மிக விரைவில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. உங்கள் சந்திப்பு மிக நீளமாக இருந்தால், சந்திப்பின் நடுவிலேயே மக்கள் (குறிப்பாக விருந்தினர்கள்) வெளியேறுவதை நீங்கள் காண ஆரம்பிக்கலாம், இது ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும் மன உறுதியுக்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும், கவனத்தை மிகவும் சிதறடிக்கும்.

தனிப்பயன் பகுதிகள் இடம்பெறுவதற்கு தேவையான விஷயங்கள்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, அனைத்து தனிப்பயன் பிரிவுகளும் பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்:

  • Agora Speakers International உடைய துணை விதிகளுடன் பொருந்தக்கூடிய கல்வி நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். பொருந்தாத விஷயங்களின் சில எடுத்துக்காட்டுகள் இதோ இங்கே. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல என்பதை நினைவில் கொள்க.
    • ஃபவுண்டேஷன் உடைய முக்கிய கோட்பாடுகளுக்கு எதிரான பிரிவுகள்.
    • ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றியோ அல்லது பொதுவாக மதத்தைப் பற்றியோ கற்பிக்கும் பிரிவுகள் (இது நடுநிலைக் கொள்கையை மீறுகிறது. உட்பொருள் பொதுவாக மதம் பற்றியது என்றாலும், ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றியது அல்ல என்றாலும், அது நடுநிலை கொள்கையை மீறுவதாகவே கருதப்படுகிறது).
    • அரசியல் கட்சி, சித்தாந்தம் அல்லது தார்மீகக் கொள்கைகளின் தொகுப்பை ஊக்குவிக்கும் அல்லது வலம் வரும் பிரிவுகள்.
    • ஏதேனும் பாகுபாடு, சகிப்புத்தன்மை, வெறுப்பு, வன்முறை போன்றவற்றை ஊக்குவிக்கும் பிரிவுகள் அல்லது சொற்பொழிவு உள்ளடக்க வழிகாட்டுதல்களுக்கு எதிராக செல்லும் பிரிவுகள்.
    • எங்கள் உத்தியோகபூர்வ இலக்குகளுக்கு எதிரான பிரிவுகள். எடுத்துக்காட்டாக, தொழில்நுட்ப முன்னேற்றம் அல்லது அறிவியலுக்கு எதிராக அல்லது இளைஞர்களின் (எந்த வயதாக இருந்தாலும்) ஈடுபாட்டிற்கு எதிராக அல்லது கலாச்சார பரிமாற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு எதிராக வாதிடும் அல்லது கற்பிக்கும் பிரிவுகள் அனுமதிக்கப்படாது.
    • போலி அறிவியலைப் பற்றி ஊக்குவிக்கும் அல்லது கற்பிக்கும் பிரிவுகள்.
  • அந்தப் பாத்திரத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அதனை முன்கூட்டியே தெரிவித்து இருக்க வேண்டும், மேலும் அந்தப் பாத்திரம் சந்திப்பின் நேரம் கண்காணிப்பாளரால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
  • முன்கூட்டியே அறியப்பட்ட தெளிவாக வரையறுக்கப்பட்ட மேம்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் சந்திப்புகளில் ஒரு புதிய பகுதியை நீங்கள் செயல்படுத்த விரும்பினால், ஆனால் இந்தத் தேவைகளை அப்பகுதி பூர்த்தி செய்யுமா என்று தெரியவில்லை என்றால், தயவுசெய்து info at agoraspeakers.org என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களுக்கு எழுதி அனுப்பவும்.

 

பயனுள்ளதாக இருக்கிறதா? பகிருங்கள்! இல்லையா? தொடர்ந்து சோதனை முயற்சி செய்யுங்கள்!

நீங்கள் ஒரு புதிய பாத்திரத்தை அல்லது செயல்பாட்டை முயற்சி செய்து, அது பயனுள்ளதாக இருப்பதாக நீங்கள் அறிந்தால், உங்கள் அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், இதன்மூலம் நாங்கள் அதை உலகளவில் உள்ள அனைத்து கிளப்புகளுக்கும் விளம்பரம் செய்ய முடியும் - எங்கள் உறுப்பினர்களுக்கு சிறப்பாக சேவை செய்வதற்காக நாங்கள் எப்போதும் சந்திப்பின் எண்ணிக்கையையும் பல்வேறு செயல்பாடுகளையும் பாத்திரங்களையும் அதிகரித்து வருகிறோம். குறுக்குச் சொற்பொழிவு, கருத்தரங்குகள், மற்றும் பிற பிரிவுகள் உறுப்பினர்களாகிய உங்கள் பங்களிப்புகளின் விளைவாகவே சேர்க்கப்பட்டன. 

மறுபுறம், பிரிவு திட்டமிட்டபடி செல்லவில்லை என்றால் - எந்த கவலையும் இல்லை. ஒருவேளை யோசனைக்கு சில பயிற்சிகள் தேவைப்படலாம். "தொடர் மேம்பாட்டு" சுழற்சியைப் பயன்படுத்தி, மீண்டும் முயற்சி செய்துப் பார்க்கவும். கருத்துக்களைப் பெற்று, யோசனையை சிறிது மாற்றியமைத்து, அந்த புதிய மாற்றங்களுடன் விஷயங்கள் சிறப்பாக செல்கிறதா என்று பாருங்கள்.

 

சந்திப்பு பாத்திரம்/பிரிவு டெம்ப்ளேட்

புதிய சந்திப்பு பாத்திரம் அல்லது சந்திப்பு பகுதியை ஆவணப்படுத்த, பின்வரும் கட்டமைப்பைப் பயன்படுத்தவும். இந்த கட்டமைப்பை விக்கி முழுவதும் மற்றும் எங்கள் ஆன்லைன் அமைப்புகளிலும் பயன்படுத்துகிறோம்.

  • பிரிவின் பெயர் - உதாரணமாக, "நகைச்சுவை கார்னர்."
  • பரிந்துரைக்கப்படும் காலம் மற்றும் சமிக்ஞைகள் - இந்தப் பகுதி பொதுவாக எவ்வளவு நேரம் நீடிக்கும்? எந்தந்த நேரங்களில் பச்சை மற்றும் மஞ்சள் சமிக்ஞைகளை இயக்க வேண்டும்?
  • கஷ்டம் - ஒரு கிளப் இந்தப் பிரிவை ஏற்பாடு செய்வது எவ்வளவு கடினமாக இருக்கும்? எங்களிடம் மூன்று நிலைகள் உள்ளன:
    • எளிதானது - எந்தவொரு கிளப்பும், அது சமீபத்தில் சாசனம் செய்யப்பட்டிருந்தாலும் கூட, அதை ஏற்பாடு செய்யலாம்.
    • இடைநிலை - அடிப்படை சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் தேர்ச்சி பெற்ற கிளப்புகளுக்கு இந்த பிரிவு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
    • கடினம் - இந்தப் பிரிவுக்கு வழக்கமான வருகை மற்றும் நல்ல நிறுவன திறன்களைக் கொண்ட நிலையான கிளப்புகள் தேவைப்படுகின்றன (உதாரணமாக, விவாதப் பிரிவு இங்கே நடைபெறும், ஏனெனில் வெற்றிகரமாகச் செயல்பட இதற்கு நிறைய ஏற்பாடும் மற்றும் பங்கேற்பாளர்கள் தேவை)
  • ஆன்லைன் மூலமுமா அல்லது நேரடியாக மட்டும்தானா?
  • முக்கிய கவனம். நான்கு முக்கிய தூண்களில் (தலைமைத்துவம், தொடர்பு, நூதன சிந்தனை, விவாதம்) ஆகியவற்றின் மீது செயல்பாடு கவனம் செலுத்துகிறதா?
  • கிளப்பிலா அல்லது வெளிப்புறத்திலா? இந்தச் செயல்பாடு கிளப் சந்திப்பின் போது நடைபெறுகிறதா அல்லது அதற்கு வெளியே நடக்கிறதா? உதாரணமாக, செயல்பாடு ஒன்றுக்கு அறிவியல் கண்காட்சிக்குச் சென்று, அங்குள்ள நபர்களை நேர்காணல் செய்ய வேண்டியிருக்கும். இது ஒரு வெளிப்புற செயல்பாடாக இருக்கும், அதற்கு பின்னர் நீங்கள் கிளப்பிற்கு ஒரு அறிக்கையை வழங்க வேண்டியிருந்தாலும் கூட.
  • விரிவான விளக்கம் - அந்தப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை விளக்குங்கள். எந்த பாத்திரங்கள் என்ன செய்கின்றன, எந்த வரிசையில், எவ்வளவு நேரம் செய்கின்றன என்பதை விளக்குங்கள். ஊடாடல்களுக்கான எடுத்துக்காட்டுகளை வழங்குவதை உறுதிசெய்க.
  • பங்கேற்கும் பாத்திரங்களின் பெயர்கள். உதாரணமாக, "ஜோக் மாஸ்டர்". சில பிரிவுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரம் தேவைப்படலாம். மேலும், ஒவ்வொரு பாத்திரத்திற்கும், பின்வருவனவற்றை குறிப்பிடவும்:
    • தயார் செய்யும் மற்றும் பங்கேற்பு நேரம். அந்தப் பாத்திரத்தை வகிக்கும் நபர் அதற்கு தயார் ஆவதற்கு எவ்வளவு நேரம் தேவை (சந்திப்பிற்கு முன்), சந்திப்பின் போது அவர்களுக்கு எவ்வளவு "மேடை நேரம்" கிடைக்கும்.
    • கஷ்டம் - சமீபத்தில் இணைந்த உறுப்பினர் கூட செய்யக்கூடிய எளிதான பாத்திரமா, அல்லது அனுபவமுள்ள உறுப்பினர்கள் மட்டுமே செய்யக்கூடிய அளவுக்கு கடினமான பாத்திரமா?
    • விளக்கம் - இந்தப் பாத்திரத்தை கொண்ட நபர் அதற்கு எவ்வாறு தயாராகிறார்? சந்திப்பின்போது அவர்கள் அதை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள்? மேலும், உதவிக்குறிப்புகள், எச்சரிக்கைகள் மற்றும் குறிப்பாக எடுத்துக்காட்டுகளை வழங்குவது பயனுள்ளதாக இருக்கும்.
    • பரிந்துரைக்கப்படும் மதிப்பீட்டு அளவுகோல்கள். கருத்துக்களை வழங்கும்போது மதிப்பீட்டாளர்களுக்கு வழிகாட்டும் விதமாக ஒவ்வொரு பாத்திரத்திற்கும் 4 முதல் 10 கேள்விகள் இடம்பெற வேண்டும்.
  • அந்தப் பகுதியை மதிப்பீடு செய்யப்போவது யார்? - இது ஒரு சிறப்பு மதிப்பீட்டாளரைக் கொண்டிருக்கிறதா (உடனடித் தலைப்புகள் பிரிவுக்கான உடனடித் தலைப்புகள் மதிப்பீட்டாளர் போல), அல்லது சந்திப்பு மதிப்பீட்டாளர், சொற்பொழிவுகளுக்கான பொது மதிப்பீட்டாளர் போன்ற பொதுவான மதிப்பீட்டு பாத்திரங்களின் ஒருவரலால் இந்தப் பாத்திரம் மதிப்பீடு செய்யப்படுகிறதா? கிளப் சந்திப்பின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று என்னவென்றால், மேம்படுத்திக் கொள்வதற்கு கிட்டத்தட்ட எல்லா விஷயங்களுக்கும் (ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு பகுதிக்கும்) கருத்துக்களைப் பெற வேண்டும் என்பதுதான்.
  • பயிற்சி பெற்ற திறன்கள் - இந்தச் செயல்பாடு எங்கள் திறன் மேட்ரிக்ஸில் உள்ள எந்த திறன்களைப் பயிற்றுவிப்பதாக நினைக்கிறீர்கள் என்பதைக் குறிக்கவும்.

Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:05:06 CET by agora.